தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூடங்குளம் அணுக்கழிவுகள் அகற்றம் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் - MOS Jitendra singh on kudankulam waste disposal

டெல்லி: கூடங்குளம் அணுக்கழிவுகள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் புதைக்கப்படுவதாக மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

kudankulam

By

Published : Nov 20, 2019, 2:56 PM IST

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவையில் திமுக உறுப்பினர் ஞானதிரவியம், கூடங்குளம் கழிவுகள் எங்கே புதைக்கப்படுகின்றன? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், "ரஷ்யாவுடனான பழைய ஒப்பந்தத்தின்படி, கூடங்குள அணுக்கழிவுகள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால், அதன்பிறகு போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவிலேயே அகற்றப்பட வேண்டும்.

அதன்படி, கூடங்குளம் அணுக்கழிவுகள் பாதுகாப்பான இடத்தில் புதைக்கப்படுகின்றன. தரையில் இருந்து சுமார் 15 கி.மீ, ஆழத்தில் சேமிக்கப்படுகின்றன. பாதுகாப்பு காரணங்களால் இந்த இடம் எங்கு இருக்கிறது என்று சொல்லமுடியாது. 2022-க்குள் கூடங்குளம் அணுக்கழிவுகள் சேமிப்புக் கிடங்கு அதன் முழு கொள்ளளவையும் எட்டிவிடும்.
கூடங்குளம் அணுக்கழிவுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது கவலை அளிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க : கூடங்குளம் சைபர் தாக்குதல் பின்னணியில் வடகொரியா ? அதிர்ச்சி தகவல்

ABOUT THE AUTHOR

...view details