தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 2.5 சதவிகிதத்துக்கு கீழாக குறைவு! - Latest Corona News

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 2.82லிருந்து 2,49ஆக குறைந்துள்ளது.

mortality-rate-down-to-2-dot-5-percent-in-india
mortality-rate-down-to-2-dot-5-percent-in-india

By

Published : Jul 20, 2020, 1:24 PM IST

உலகம் முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்துவருகிறது. இதுவரை கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சத்து 47 ஆயிரத்து 584ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 11 லட்சத்து 11 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 503ஆக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.82லிருந்து 2.49ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை தரப்பில், ''கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மக்களுக்குச் சிறப்பாகச் சிகிச்சை வழங்கியதன் மூலம் இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.5 சதவிகிதத்தும் கீழ் குறைந்துள்ளது. நோய்த் தடுப்பு உத்தி, தீவிர மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட அணுகுமுறையால் உயிரிழப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது அது 2.49 சதவிகிதமாக உள்ளது. இதனால் உலகளவில் கரோனாவால் ஏற்படும் குறைந்த உயிரிழப்பு விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

கரோனாவுக்கு எளிதில் இலக்காகும் முதியவர்கள், கர்ப்பிணிகள், பிற நோயாளிகள் ஆகியோர் இருப்பதைக் கண்டறிய பல மாநிலங்கள் மக்கள்தொகை அளவில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. கைபேசி செயலிகள் போன்ற தொழில்நுட்ப உதவிகளுடன், இந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால், தொற்று நோய்க்கு இலக்காக அதிக வாய்ப்புள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அதனால் ஆரம்பக் கட்டத்திலேயே பாதிப்பு கண்டறியப்பட்டு, உரிய நேரத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு, மரணங்கள் குறைக்கப்பட்டன.

இடம்பெயர்ந்து செல்லும் மக்களைக் கையாள்வது, சமூக அளவில் விழிப்புணர்வை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஆஷா திட்ட அலுவலர்கள், ஏ.என்.எம். பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முன்கள வீரர்கள் பாராட்டுக்குரிய பணிகளைச் செய்திருக்கின்றனர்.

இவற்றின் விளைவாக 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கரோனா மரணங்களின் எண்ணிக்கை, இந்திய அளவிலான சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளன. மணிப்பூர், சிக்கிம், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் அந்தமான் நிகோபர் தீவிலும் கரோனா மரணங்கள் எதுவுமே இல்லாமல் பூஜ்யமாக உள்ளது. 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது 1 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. இது நாட்டில் பொதுச் சுகாதார அமைப்பு முறை சிறப்பாகச் செயல்படுவதைக் காட்டுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு விகிதம்:

இமாச்சலப் பிரதேசம் - 0.75

பிகார் - 0.83

ஜார்க்கண்ட் - 0.86

தெலங்கானா - 0.93

உத்தரகாண்ட் - 1.22

லடாக் (யூனியன் பிரதேசம்) - 0.09

ஆந்திரப் பிரதேசம் - 1.31
திரிபுரா -0.19

ஹரியானா - 1.35

அசாம் - 0.23

தமிழ்நாடு - 1.45

தாத்ராநகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ - 0.33

புதுவை - 1.48

கேரளா - 0.34

சண்டீகர் -1.71

சத்தீஸ்கர் - 0.46

ஜம்மு-காஷ்மீர் (யூனியன் பிரதேசம்) - 1.79

அருணாச்சலப் பிரதேசம் - 0.46

ராஜஸ்தான் - 1.94

மேகாலயா - 0.48

கர்நாடகா - 2.08

ஒடிசா - 0.51

உத்தரப் பிரதேசம் - 2.36

கோவா - 0.60.

இதையும் படிங்க:மனிதர்களிடத்தில் கோவாக்ஸினை செலுத்தி பரிசோதிக்கவுள்ள எய்ம்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details