தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலுவையில் 400-க்கும் மேற்பட்ட அரசியல் சாசன வழக்குகள்

அரசியல் சாசனம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

SC
SC

By

Published : Sep 26, 2020, 4:01 PM IST

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விவரங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரத்தின்படி அரசியல் சாசனம் தொடர்பான வழக்குகள் மட்டும் 435 நிலுவையில் உள்ளன. அதன்படி, ஐந்து நீதிபதிகள் அமர்வில் 286 வழக்குகளும், ஏழு நீதிபதிகள் அமர்வில் 13 வழக்குகளும், ஒன்பது நீதிபதிகள் அமர்வில் 135 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

அரசியல் சாசனம் தொடர்பான சிக்கல்கள், முரண்பட்ட கருத்துகள் உருவாகும்போது நீதிமன்றம் இவ்வாறு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்குகளை மாற்றுவது வழக்கம்.

கரோனா பரவல் காரணமாக நாட்டின் நீதிமன்றங்கள் காணொலி வாயிலாக மட்டுமே செயல்பட்டுவரும் நிலையில், இதன் காரணமாக வழக்குகள் விசராணைக்கு வருவதில் மேலும் தாமதமாகலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருவதால் நீதிமன்றங்கள் மெள்ள இயல்புநிலைக்குத் திரும்பி வழக்கமான விசாரணைகள் தொடங்கும் என உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:ரூ.28,000 கோடி மோசடி - பிரபல நிதி நிறுவனம் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details