புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் சுரக்குடியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் முதல் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்து காரைக்கால் நேரு மார்க்கெட்டில் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வருவதால்அங்குள்ள வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அம்மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.