இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு விழாக்களில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், இன்று ஜோத்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “தரமான கல்வியை அளிப்பதும், ராஜஸ்தானில் வாழும் குடிமக்களுக்கு முறையான மருத்துவ வசதியை எளிதில் பெறுவதும்தான் ஜோத்பூர் எய்ம்ஸின் முக்கிய குறிக்கோள்.
அனைத்து குடிமக்களுக்கும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் - குடியரசுத் தலைவர்
ஜெய்பூர்: நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்ய பல முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
More needs to be done to ensure quality education, healthcare to all citizens: Kovind
அது எதற்காக தொடங்கப்பட்டதோ அதனைப் ஜோத்பூர் எய்ம்ஸ் பூர்த்தி செய்துள்ளது. சிறந்த கல்வியையும், சுகாதாரத்தையும் இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக கிராமத்தில் வாழும் மக்களுக்கு உறுதிசெய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ’பெண்களின் உணர்வுகளை மதிக்க ஆண்களுக்கு கற்றுத்தர வேண்டும்‘ - குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்