உத்தரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகரில் கடந்த 18ஆம் தேதி மின்னல் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 19ஆம் தேதி குஷிநகர், டியோரியா ஆகிய இடங்களில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து 20ஆம் தேதி இருவர் பலியாகினர். இந்நிலையில் நேற்று கான்பூர், ஃபதெபூரில் தலா 7 பேர், ஜான்சியில் 5 பேர், ஜலாவுனில் 4 பேரும் மின்னல் பாய்ந்து உயிரிழந்தனர்.
மின்னல் பாய்ந்து கொத்துக் கொத்தாக மடிந்த மக்கள்!
லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத்தில் மின்னல் பாய்ந்து நான்கு நாட்களில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
monsoon light
மேலும் ஹமிர்பூரில் 3 பேர், காளிப்பூரில் இருவர், பிரதாப்கார், கான்பூர், தெஹாட், சித்ராகூட் ஆகிய ஊர்களில் தலா ஒருவர் என இதுவரை மொத்தம் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.