கரோனா பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயமாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.