இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”வங்கக் கடலில் காற்றின் சுழற்சி அதிகளவில் காணப்படுவதால் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தென்படுகிறது.
கிழக்கு மத்திய அரபிக் கடலில் மே 31ஆம் தேதி முதல் ஜுன் 4ஆம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் காரணமாக கேரளாவில் ஜுன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கிய அடுத்த நான்கு நாள்களுக்கு பிறகு தென்மாநிலங்களிலும் பருவமழை தொடங்கும். இந்தாண்டு நாட்டில் சராசரி பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.