தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குரங்குகள் தாக்கியதில் பெண் உயிரிழப்பு - suryapet district

ஹைதராபாத்: சூரியப்பேட்டை மாவட்டத்தில் குரங்குகளிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தாயை, குரங்குகள் தாக்கியதில் உயிரிழந்தார்.

குரங்குகள்
ஹைதராபாத்

By

Published : Dec 3, 2020, 9:29 AM IST

தெலங்கானா மாநிலம் சூரியப்பேட்டை மாவட்டம் மதிராலா மண்டலில் வசிப்பவர் ஸ்ரீலதா, இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.

இவரது வீட்டின் அருகில் உள்ள குரங்குகள், அவரது இரண்டு மாத குழந்தையைத் தாக்க முயன்றுள்ளது, இதைக்கண்ட ஸ்ரீலதா நீண்ட குச்சியை எடுத்து குரங்குகளைத் தாக்க முயன்றபோது, அனைத்து குரங்குகளும் அவரைத் தாக்கியுள்ளது.

தற்செயலாக கீழே விழுந்த ஸ்ரீலதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், இவரது கணவர் இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடைபெற்றுவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details