கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலுள்ளது. இதனால், தருமபுரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், அங்கு வசிக்கும் குரங்குகள்தான் அதிகம் பாதிப்படைந்துள்ளது.
உணவு கிடைக்காமல் கற்களை கடித்து தின்ற குரங்கு! - உணவில்லை கல்லைகள் உண்ணும் குரங்கு
தருமபுரி: மனிதர்களைப் பராமரிக்கும் அரசு, விலங்குகளையும் பராமரிக்க வேண்டுமென உயிரின ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

இதுவரை, சுற்றுலாப் பயணிகளிடமிருந்தும், உணவங்களின் மீதங்களிலிருந்து உண்டுவந்த குரங்குகளுக்கு, தற்போது உணவளிக்க யாருமில்லை. உணவைத் தேடி அங்குமிங்கும் அலைந்த குரங்குகளில் ஒன்று சாலையில் கிடக்கும் சிறு கற்களையெடுத்து, உண்ணுகிறது.
மனிதர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விலங்குகளுக்கு உணவளிக்க அரசு மறந்துவிட்டது. இனியாவது, வனத் துறை மூலம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உயிரின ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு தனது வாகனத்தை வழங்கி உதவிய எம்.எல்.ஏ!