ரஃபேல் விமானத்தை வாங்க மத்திய அரசு, அரசின் கருவூலத்திலிருந்து பணத்தை திருடியுள்ளது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், "பாதைகள் பல இருந்தாலும், உண்மை ஒன்றுதான்" என்ற மகாத்மா காந்தியின் வார்த்தையையும் மேற்கோள்காட்டி அவர் இந்தக் கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரெஞ்சு தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து 2016ஆம் ஆண்டு, ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் நோக்கில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.