மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல நடிகர்கள் அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல தெலுங்கு நடிகர் மன்சு மோகன் பாபு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜகன் மோகன் ரெட்டியை அவர் வீட்டில் சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மோகன் பாபு 500 படங்கள் மேல் நடித்தும், பல படங்களை தயாரித்தும் உள்ளார்.