தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் பேச்சில் நாகரீகமில்லை - சரத் பவார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்

பிரதமர் மோடியின் பேச்சில் நாகரீகமில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

சரத் பவார்

By

Published : Feb 9, 2019, 7:37 PM IST

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தினர். அவர்களின் முடிவுக்கு மதிப்பளித்தே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இருந்தாலும் அது பற்றி சிந்திக்க உள்ளேன் என்றார். முன்னதாக 2018-ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பவார், நாடாளுமன்ற தேர்தல்களில் தான் இனி போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் சமீபத்திய உரை குறித்து கருத்து தெரிவித்த அவர், மன்மோகன் சிங், நரசிம்மராவ் உள்ளிட்ட பல முந்தைய பிரதமர்களின் உரையை கேட்டுள்ளேன். அவைகளின் வரலாறு மற்றும் மரியாதையை கருத்தில் கொண்டு நாகரீகமாக நடந்துகொண்டுள்ளனர். ஆனால் மோடியின் பேச்சு நாகரிகமற்ற முறையிலும், கலாச்சாரத்திற்கு எதிரானதாகவும் இருந்தது என்றும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details