தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அன்னையுடன் உணவு உண்ட பிரதமர் நரேந்திர மோடி - மதிய உணவு

காந்திநகர்: 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதிய உணவை தனது தாய் ஹீராபென்னுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்தார்.

modis-69th-bday-pm-performs-narmada-aarti-shares-lunch-with-mother

By

Published : Sep 17, 2019, 5:44 PM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அந்த வகையில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த பிறந்தநாளை பல்வேறு இடங்களுக்குச் சென்று கொண்டாடி மகிழ்ந்தார். இன்று காலை சர்தார் சரோவர் அணை, குருதேஷ்வர் கோயில், ஏக்தா நர்சரி, கேவடியா பூங்கா உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றிருந்தார்.

அன்னையிடம் ஆசிபெற்ற பிரதமர்

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது தாயிடம் ஆசிபெறுவதற்காக அவர் வசித்துவரும் காந்திநகர் இல்லத்திற்குச் சென்றிருந்தார். அங்கு தனது தாய் ஹீராபென்னிடம் ஆசிபெற்ற மோடி, தாயுடன் அமர்ந்து மதிய உணவு உண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details