சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்று, தற்போது சீனாவில் குறைந்துவிட்டாலும் இத்தாலி, கனடா, அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. கோவிட் 19 வைரஸ் தொற்றை மத்திய அரசு பேரிடராக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கோவிட் 19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தொழில்நுட்பம் சார்ந்த ஐடியாக்கள் வரவேற்கப்படுவதாகப் பதிவிட்டுள்ளார். மேலும், சிறந்த ஐடியாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐடியாக்களை பொதுமக்கள் mygov.in என்ற தளத்திலும் MyGov செயலியிலும் பகிரலாம்.
மாட்டின் கோமியத்தைக் குடித்தால் கோவிட் 19 வைரஸ் தொற்று வராது என்று இந்து மகா சாபா சார்பில் ஒரு புறம் பரப்புரைகள் முன்னெடுத்துவரும் நிலையில், பிரதமர் மோடி தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை கேட்டுள்ளது ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.
இதையும் படிங்க:ஜெகந்நாத் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடு