தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘நாம் இணைந்தால் என்ன என மோடி கேட்டார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்’ - சரத் பவார் - மாகாராஷ்டிரா சரத் பவார் பிரதமர் மோடி

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தன்னுடன் இணைந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்ததாகவும், அதனை தான் திட்டவட்டமாக மறுவிட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

SARAD PAWAR
SARAD PAWAR

By

Published : Dec 3, 2019, 3:16 PM IST

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சரத் பவார் அளித்திருந்த பேட்டியில், "என்னுடன் இணைந்து பணிபுரிய மோடி விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கு நான், தனிப்பட்ட முறையில் உங்களுடன் எனுக்கு நல்ல உறவிருந்தாலும், நாம் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லாத ஒன்று என்று மறுத்துவிட்டேன்.

பிரதமர் மோடி எனுக்கு குடியரசுத் தலைவர் பதவியை தரவிருந்ததாகப் பலர் கூறுகின்றனர். ஆனால் அது முற்றிலும் பொய். என் மகள் சுப்ரியா சூலேவுக்கு மத்திய அமைச்சரேவையில் இடம் தருவதாக அவர் கூறிருந்தார்.

அஜித் பவார் பட்னாவிஸுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிந்தவுடன் நான் முதலில் அழைத்தது (சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ்) தாக்ரேவைத்தான். அவரிடம் விவரத்தைக் கூறினேன், என் ஆதரவு அவருக்குதான் என நம்பிக்கை அளித்தேன்.

நான் அஜித் பவாருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிந்தவுடன் அவருடன் இருந்த எம்எல்ஏக்களுள் ஐந்து பேர் என்னிடம் வந்திவிட்டனர். அஜித் பவார் செய்தது தவறு என என் குடும்பத்தினர் கருதினர்" எனத் தெரிவித்தார்.

'வளமான மகாராஷ்டிரா' - புதிய கூட்டணி அரசு வெளியிட்ட அதிரடி திட்டங்கள்!

ABOUT THE AUTHOR

...view details