இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக விளங்கக் கூடிய சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை தந்திருந்தார். நிலவிற்கு மிகவும் அருகில் இருந்த விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்காததால், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். பின்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியாவே பெருமையடைகிறது” - பிரதமர் மோடி நம்பிக்கை - Prime Minister Narendra Modi congratulates ISRO scientists
இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்வதாகவும், சந்திரயான்-2 தரையிறங்குவது தொடர்பாக நாம் நம்பிக்கை இழக்க வேண்டாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்திய நாடே பெருமையடைகிறது" - பிரதமர் நரேந்திர மோடி
மேலும் அந்த பதிவில், "இந்திய நாடு மிகச்சிறந்த விஞ்ஞானிகளால் பெருமையடைகிறது. அந்த விஞ்ஞானிகள் நாட்டிற்கு எப்போதும் சிறந்த ஒரு விண்வெளி முயற்சியை செய்துள்ளனர். இந்த தருணம் தைரியமூட்டுவதாக அமைந்துள்ளது. அந்த தைரியத்தை ஊட்டுவதில் நாங்களும் முக்கிய பங்கு வகிப்போம். இஸ்ரோ தலைவர் சந்திரயான்-2 குறித்த தரவுகளை பகிர்ந்தார். நாங்கள் இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். தொடர்ந்து விண்வெளி துறையில் கடின உழைப்போடு செயலாற்றுவோம்" என்று தெரிவித்திருந்தார்.
Last Updated : Sep 7, 2019, 5:35 AM IST