கரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தடுப்பு நடவடிக்கை குறித்து உலகின் 20 முன்னணி பொருளாதார சக்திகளின் கூட்டமைப்பான ஜி-20 நாடுகளின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி கட்சி மூலம் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு உரையற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களைக் காப்பற்றுவதற்கு ஜி - 20 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவசரத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும், இந்த அசாதாரண சூழலின் காரணமாக சமூகத்தின் அடித்தட்டு மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் சிக்கலை களைவதற்கு முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சூழலியல் சிக்கல், பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் உலகமயமகாக்கல் கொள்கை என்பது தோல்வியடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்த மோடி, இந்தச் சூழலில் புதிய கோணத்தில் உலகமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்பட்டு மனித குலத்தை காக்க வேண்டியது அவசியம் என்றார். ஜி 20 நாடுகளைச் சேரந்த மக்களே 90 விழுக்காடு கரோனா வைரஸ் பாதிப்பை, 88 விழுக்காடு கரோனா உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர் என மோடி வருத்தம் தெரிவித்தார்.