பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.20) மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இதை அவர் ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
நாட்டு மக்களிடம் ஒரு தகவலை பகிரவுள்ளதாக அவரது பதிவில் கூறியுள்ளார். நாடு முழுவதும் மெல்ல கரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டிற்கு வருகிறது.
இந்நிலையில் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் மக்கள் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தடுப்பூசி குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், அது தொடர்பான முக்கிய விவரங்களை ஏதேனும் தெரிவிப்பாரா என்ற ஆர்வமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:3 மாதத்தில் முதல்முறையாக 50 ஆயிரத்துக்கும் குறைவான கரோனா பாதிப்பு