இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் எஸ்.பி கொச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ உலகளாவிய மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மாநாடாக கருதப்படும் இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் (ஐ.எம்.சி), தொலைத்தொடர்பு, மொபைல் இணைய இணைப்பு மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க, விவாதிக்க, அங்கீகரிக்க மிகச்சரியான தளமாக விளங்குகிறது.
கோவிட் -19 தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தல் இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படவுள்ள நான்காவது மாநாடு இணைய வழி மாநாடாக நடத்தப்படவுள்ளது. டிச.8ஆம் தேதி முதல் டிச.10ஆம் தேதிவரை மெய்நிகர் வழியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின், தொடக்க அமர்வில் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, தொலைத்தொடர்பு செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இவர்களுடன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, பாரதி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மற்றும் எரிக்சன் தலைவர் (தென்கிழக்கு ஆசியா, ஓசியானியா மற்றும் இந்தியா) நுன்சியோ மிர்டிலோ ஆகியோரும் இந்த அமர்வில் இணைவார்கள். இந்தியா மட்டுமல்லாது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள், 210 பேச்சாளர்கள், 150க்கும் மேற்பட்ட கண்காட்சி பங்கேற்பாளர்கள் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட சி.எக்ஸ்.ஓ-நிலை பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.