கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர்களுடனான வீடியோ கான்பரன்சிங் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் எனவே கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிகிறது.