பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று (நவம்பர் 1) நான்கு பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் சப்ரா நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது பரப்புரையை மோடி தொடங்க உள்ளார்.