நாடுமுழுவதும் மக்கவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், மே 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
வாரணாசியில் மோடி: அலைமோதிய தொண்டர்கள் கூட்டம்! - 2019ELECTION
லக்னோ: வாரணாசி தொகுதியில், பனாரஸ் பல்கலைக்கழகத்தின் லங்கா கேட் பகுதியிலிருந்து பிரதமர் மோடி, இன்று தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
இந்நிலையில், கட்சித் தலைமை அறிவித்தால் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடத் தயார் என அம்மாநில கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால், தற்போது காங்கிரஸ் சார்பில் வாரணாசி தொகுதியில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தின் வெளிப்புறத்தில் உள்ள மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, லங்கா கேட் பகுதியிலிருந்து தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.