தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி செலுத்தல்: மோடி பெருமிதம் - modi speech on global potato conclave

இம்மாதத் தொடக்கத்தில் ஆறு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 12 ஆயிரம் கோடி செலுத்தியதின் மூலம் புதிய சாதனை படைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi speech on global potato conclave
modi speech on global potato conclave

By

Published : Jan 28, 2020, 3:05 PM IST

மூன்றாவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி அரசின் கொள்கைகளாலும் விவசாயிகளின் கடின உழைப்பாலும் உணவு தானியங்கள், உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல முயற்சிகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மோடி குறிப்பிட்டார்.

விவசாயிகளின் முயற்சி, அரசாங்கத்தின் கொள்கை ஆகியவற்றின் மூலம் உணவுப் பொருள்களின் உற்பத்தியில் இந்தியா முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது எனவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.12 ஆயிரம் கோடியை மாற்றியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சிஏஏ போராட்டக்காரர்களுடன் அமர துணிச்சல் உள்ளதா? - கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா சவால்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details