அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். அவரது வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பிராந்திய பிரச்னைகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதித்தோம். காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க ஒப்புக்கொண்டோம்.
அதிபர் ஜோ பைடனுன் நானும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு உறுதியளித்துள்ளோம். பொருளாதார-ராணுவ- இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும் இருவரும் எதிர்நோக்குகிறோம். இந்தோ- பசிபிக் பகுதி மற்றும் அதைத் தாண்டியும் அமைதியையும் பாதுகாப்பதையும் உறுதி செய்வதற்காக புதிய வியூகங்களை எதிர்நோக்குகிறோம்" எனக் குறிப்பிடிருந்தார்.
ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையிலான முதல் உரையாடல் இதுவாகும்.