அசாமில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது,
பாஜக ஆட்சி காலத்தில் அசாம் மாநிலத்தில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பாஜக ஆட்சி காலத்தில் மட்டுமல்லாது வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் அனைத்தும் ஊழலை ஒழிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது. அதனை ஒழிக்க அரும்பாடுப்பட்டு வருகிறோம்.
அசாம் மாநிலத்தில் வெளிநாட்டவர்கள் ஊடுருவலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதற்காக தேசிய குடியுரிமை சட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களது எதிர்ப்பை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அனைவரது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
எதிர்க்கட்சியினர் ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருகின்றனர். அதற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். மாநிலங்களின் வளர்ச்சியை காங்கிரஸ் அரசு புறக்கணித்து வருகின்றது. நாட்டின் வளர்ச்சியே எங்களின் இலக்காகும், என்றார்.