காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை குடியேறிகள் என்று விமர்சித்துள்ளார். தேசிய குடியுரிமை மசோதா தொடர்பாக பேசிய அவர், இந்த நாட்டில் அனைவரும் சமம். இந்துக்களும், இஸ்லாமியர்களும் சமமானவர்கள். ஆனால் இந்துக்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இது இஸ்லாமியர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். தேசிய குடியுரிமை மசோதாவை நாடு முழுக்க அமல்படுத்த பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மறைமுக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.