பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துவருகிறார்.
இந்நிலையில், கோவிட்-19 பரவல் காரணமாக நாட்டில் உள்ள சுமார் 10 கோடி பேரின் வேலைகள் ஆபத்திலுள்ளதாக நாடாளுமன்ற குழு கவலையெழுப்பியுள்ளதாக வெளியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
அத்துடன், "நரேந்திர மோடி நாட்டை நாசமாக்கி வருகிறார்.
- பணமதிப்பு நீக்கம்,
- ஜிஎஸ்டி,
- கரோனா தொற்று நோயில் ஊழல்,
- பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அழித்தல்.
மோடியின் முதலாளித்துவ ஊடகங்கள் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கியுள்ளன. இந்த குழப்பம் விரைவில் தகர்த்தெறியப்படும்" என்று இந்தியில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ரஃபேல் விமானங்களின் முதல் தொகுப்பு இந்தியா வந்தடைந்தது. இது குறித்த ராகுல் காந்தி,"விமான படைக்கு வாழ்த்துகள். மோடி அரசு இதற்கு பதில் சொல்லுமா?
- ஒரு விமானத்தின் விலை ₹.526 கோடிக்கு பதில் ஏன் ₹.1670 கோடிக்கு வாங்கப்படுகிறது?
- 126 விமானத்திற்கு பதில் ஏன் 36 மட்டும் வாங்கப்பட்டது?
- HALக்கு பதில் ஏன் அனில் அம்பானிக்கு ₹.30000 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டது" என்று மூன்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
ரஃபேல் குறித்து ராகுல் காந்தியின் மூன்று கேள்விகள் நேற்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை: 2035க்குள் சேர்க்கை விகிதத்தில் 50 விழுக்காடு இலக்கு!