இந்தியப் பிரதமராக இரண்டாவது முறை பதவி ஏற்ற பின்னர், நரேந்திர மோடி முதல் முறையாக இரண்டு நாள் பயணமாக பூடான் சென்றார். அதனைத் தொடர்ந்து பூடான் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பூடான் சென்று தாயகம் திரும்பிய பிரதமர் மோடி - டெல்லியில் வரவேற்பு - பூடான் சென்று தாயகம் திரும்பிய பிரதமர் மோடி
புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு மத்திய அமைச்சர் மந்திரி ஜெய்சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தார்.

'ரூபே அட்டை' அறிமுகம், இந்தியா-பூடான் இடையேயான 50 ஆண்டு நீர் மின்சக்தி ஒத்துழைப்பு நினைவு தபால்தலை வெளியீடு மற்றும் உயர்மட்ட கூட்டங்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இருநாட்டுப் பிரதமர்கள் இடையிலான பேச்சுவார்த்தையின்போது 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இரண்டாவது நாளில் அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.