தமிழ்நாடு

tamil nadu

இந்திய, ரஷ்ய உறவு மேம்படுமா?

By

Published : Jul 3, 2020, 12:26 AM IST

இரு நாட்டு உறவை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா ரஷ்யா
இந்தியா ரஷ்யா

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றிபெற்று நேற்றோடு(ஜூலை 2) 75 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி, தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இரு நாட்டு உறவை மேம்படுத்த இருவரும் உறுதி பூண்டுள்ளதாக ஒருவருக்கொருவர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2036ஆம் ஆண்டுவரை அதிபர் பதவியில் நீடிப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஜூன் 24ஆம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில், நட்புணர்வை பேணும் வகையில் இந்திய ராணுவம் கலந்து கொண்டது.

கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை செய்தனர். கரோனாவுக்கு பிறகான காலத்தில் உள்ள சவால்களை ஒன்றிணைந்து எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் இருவரும் பேசினர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மூன்றாவது இடத்திலும்; இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் இதுவரை 6,04,641 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் கலந்து கொள்ளவுள்ளார். இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 'அடுத்த 16 ஆண்டுகளுக்கு புதின்தான் அதிபர்'... வாக்கெடுப்பில் வெளியான மக்களின் குரல்!

ABOUT THE AUTHOR

...view details