தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய மேம்பாட்டில் டாடா குழுமம் - பிரதமர் மோடி பாராட்டு - இந்திய மேம்பாட்டில் டாடா குழுமத்தின் பங்கு

இந்திய மேம்பாட்டில் சிறந்த பங்காற்றிய டாடா குழுமத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Dec 19, 2020, 3:26 PM IST

டெல்லி:அசோசம் நிறுவன வார நிகழ்ச்சி இன்று (டிச.19) காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, டாடா குழுமத் தலைவர் ரதன் டாட்டாவிற்கு 'அசோசம் எண்டர்பிரைஸ் ஆஃப் சென்சுரி' என்ற விருதினை வழங்கி கவுரவித்தார். பின்பு பேசிய அவர், கடந்த நூறு ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளன. இந்திய மேம்பாட்டில் டாடா குழுமம் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது" என்றார்.

பின்பு பேசிய ரதன் டாடா, "சில சமயங்களில் நமக்கு மனக்குறைகள், எதிர்ப்புகள் இருக்கும். ஆனால் கலக்கங்கள் இருக்காது. கரோனா ஊரடங்கின்போது அனைவரும் ஒன்றிணைந்து இந்த பெருந்தொற்றுக்கு எதிராக போராட முடியும் என நிரூபிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் சில நிமிடங்களுக்கு வீட்டின் விளக்குகளை அனைத்து தங்களது பலத்தைக் காட்டியுள்ளனர்.

ஒரு நிறுவனமாக பெருந்தொற்றை எதிர்த்து போராட முடியும் என்ற வழியில் பயணிக்க வேண்டியது நமது வேலை. அதனை சிறப்பாக செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கரோனா போன்ற கடினமான காலத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடிக்கு நன்றி. தான் எதை செய்ய முடியும் என நினைத்தாரே, மக்களை அதே வழியில் பயணிக்கச் செய்து நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி என உலக நாடுகள் உற்றுநோக்கும் தருணம் விரைவில் வரும்" என்றார்.

இதையும் படிங்க:ரத்தன் டாடா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறாரா மாதவன்?

ABOUT THE AUTHOR

...view details