தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’செம க்யூட்’... 19 மாதக்குழந்தை குறித்து மோடி ட்வீட் - நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியை அடையாளம் கண்டுகொண்ட 19 மாதக்குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Narendra Modi

By

Published : Oct 17, 2019, 10:06 PM IST

பிரபல பாலிவுட் நடிகை குல் பனாக். பிறந்து 19 மாதங்களேயான இவரது மகன் நிஹால் செய்தித்தாள்கள், இதழ்கள் என அனைத்திலும் பிரதமர் நரேந்திர மோடியை சரியாக அடையாளம் கண்டுகொள்கிறார்.

அவர் அடையாளம் கண்டுகொள்வதை வீடியோவாக பதிவுசெய்த குல் பனாக், நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து அதை பதிவிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள நரேந்திர மோடி, "இளம் நிஹாலுக்கு எனது ஆசீர்வாதங்கள். வாழ்வில் அவர் என்ன செய்ய ஆசைப்படுகிறாரோ, அதற்கு எனது வாழ்த்துக்கள். அவர் உங்களை ஒரு சிறந்த வழிகாட்டியாகப் பெற்றுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். இது ட்விட்டரில் தற்போது வைரலாகியுள்ளது. குல் பனாக் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜகவுக்கு வாக்களியுங்கள்! வாக்குச் சேகரிப்பில் யோகா குரு!

ABOUT THE AUTHOR

...view details