முன்னாள் பிரதமரும் பாஜகவை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
கார்கில் நாயகனின் முதலாமாண்டு நினைவுநாள் - தலைவர்கள் அஞ்சலி - vajpayee first death anniversary news
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திவருகின்றனர்.
![கார்கில் நாயகனின் முதலாமாண்டு நினைவுநாள் - தலைவர்கள் அஞ்சலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4148356-thumbnail-3x2-vaj.jpg)
வாஜ்பாய் முதலாமாண்டு நினைவு தினம்
இந்நிலையில், வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள் துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் மரியாதை செலுத்திவருகின்றனர்.
வாஜ்பாய் ஆட்சியின்போதுதான் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே கார்கில் யுத்தம் நடைபெற்றது. இதில், இந்தியா வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது.