தாய்லாந்தில் நடைபெறும் 16ஆவது ஆசியன் கூட்டமைப்பு மாநாடு, கிழக்காசிய உச்சி மாநாடு, பிராந்திய கூட்டமைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார்.
இரண்டாவது நாளான நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16ஆவது இந்தியா-ஆசியன் உச்சி மாநாடு நடைபெற்றது. அதையடுத்து மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூகியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.