குஜராத் மாநில புதிய பாஜக தலைவராக மக்களவை உறுப்பினர் சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று சந்தித்து சி.ஆர்.பாட்டீல் வாழ்த்துப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''எளிமையான பின்னணியில் இருந்து வந்துள்ள பாட்டீல், கட்சியின் பெயருக்காக உழைத்ததுடன் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர். மக்களவை உறுப்பினராக இவரது செயல்கள் மிகவும் பாராட்டுக்குரியது. அவரது தலைமையில் குஜராத் பாஜக நிச்சயம் புதிய உயரத்தை எட்டும் என நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.