மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 348 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் மிக விமரிசையாக கொண்டாடிவருகின்றனர்.
அத்வானியுடன் மோடி, அமித் ஷா சந்திப்பு
டெல்லி : மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் மூத்தத் தலைவருமான அத்வானியை சந்தித்தனர்.
பிரதமர் நரோந்திரமோடி, அமித்ஷா பாஜக தலைவர் அத்வானி
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மூத்தத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அக்கட்சியின் முதுபெரும் தலைவரான அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.