மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் ஆஸாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, 'இளைஞர்கள் வேலை வாய்ப்பு குறித்து கேட்கும் போது மத்திய அரசோ நிலாவைப் பார் என்கிறது. சமீபத்திய மோடி,சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பின் போது மோடி 2017ஆம் ஆண்டு சீனப்படையினர், இந்திய எல்லைக்குள் ஊடுருவியதைப் பற்றி கேட்டாரா' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பேசிய அவர் ”பெரும் பணக்காரர்கள் 15 பேரின் ரூ. 5.5 லட்சம் கோடியைத் தள்ளூபடி செய்யும் அரசு, ஜிஎஸ்டி மூலம் ஏழைகளிடமிருந்து பணத்தை சுரண்டுகிறது. மத்திய அரசு நாட்டின் பிரச்னைகள் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்”.