உத்தரப் பிரதேச மாநிலகிழக்குப்பகுதிகாங்கிரஸ் பொதுச்செயளாலர் பிரியங்கா காந்தி, டெல்லி காங்கிரஸ் தலைவரும், வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஷீலா தீட்சித்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
‘வீட்டுப்பாடம் செய்யத்தவறிய ஸ்கூல் பையன் மோடி’ - பிரியங்கா காந்தி! - பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வீட்டுப் பாடம் செய்யத் தவறிய ஸ்கூல் பையன் போன்றவர் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
priyanka modi
அப்போது பேசிய அவர், ‘தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத மோடி, நேரு-காந்தி குடும்பத்தை குற்றம்சாட்டுகிறார்.
இது எப்படி இருக்குனா, ஸ்கூல்ல கொடுத்த வீட்டு பாடத்த முடிக்காமல் திணறும் ஸ்கூல் பையன் மாதிரி இருக்கிறது. அதிலும் நான் வீட்டு பாடம் முடித்துவிட்டேன். அந்த பேப்பரை நேருஜி எடுத்து விட்டார் என சொல்வது போல் இருக்கிறது’ என கிண்டலாக விமர்சித்துள்ளார்.