ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று வந்திருந்தார். இவரின் வருகையால் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு தனி விமானம் மூலம் மோடி டெல்லி புறப்பட்டார்.
சென்னையை கலக்கிய மோடி! - Modi News
சென்னை: ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவில் சிறப்பான உரையாற்றிய மோடி, "நம் நாட்டின் தொழில்நுட்பம் சிறப்பானது மட்டுமல்ல, தனித்துவமானதாக இருப்பதால் அதனை உலகம் விரைவில் பயன்படுத்தும். தொழில்நுட்பத்தில் இந்தியா, சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்றுகிறது" என்றார்.
மோடியின் வருகையால் ட்விட்டரில் எப்போதும்போல் #gobackmodi, #TNWelcomesModi ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின. பிரதமர் மோடியுடனான சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சந்திப்பு அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிவரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி மீண்டும் சென்னை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.