ஐ.எஃப்.எஸ் தினமான இன்று (அக்டோபர் 9) இந்திய வெளியுறவுத் துறை அலுவலர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
ஐ.எஃப்.எஸ் தினம்: வெளியுறவுத்துறை அலுவலர்களை பாராட்டிய மோடி! - பிரதமர் மோடி டவீட்
டெல்லி: கரோனா காலகட்டத்தில் வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்டு வருவதில், இந்திய வெளியுறவுத் துறை அலுவலர்களின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.
அந்த ட்வீட்டில், " ஐஎஃப்எஸ் நாளில், அனைத்து இந்திய வெளியுறவுத்துறை (#IndianForeignService) அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள். அவர்கள் பணிகள் நாட்டிற்கு சேவை புரிவதை (#ServingTheNation) நோக்கியே இருந்தது. மேலும், அவர்கள் தங்கள் பணிகள் மூலம் சர்வதேச அளவில் தேசிய நலன்களை மேம்படுத்துவது பாராட்டத்தக்கது. வந்தே பாரத் மிஷன் மற்றும் கோவிட் தொடர்பான பிற உதவிகளின்போது நமது குடிமக்களுக்கும் மற்றும் பிற நாடுகளுக்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை'' எனப் பதிவிட்டிருந்தார்.