மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தப்பி பிழைத்து வந்த இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடவுளாக தெரிகிறார்.
அந்த நாடுகளில் அவர்கள் நரக வேதனையை அனுபவித்தார்கள். தங்களின் உடைமைகளையும், வாழ்க்கையையும் இழந்தார்கள். தாய் பிறப்பை கொடுக்கிறார். கடவுள் வாழ்வை கொடுக்கிறார். அந்த வகையில் நரேந்திர மோடி அவர்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார்” என்றார்.
இந்திய குடியுரிமை திருத்த மசோதா 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக தப்பி வந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு நரேந்திர மோடி கடவுளாக தெரிகிறார்: சிவ்ராஜ்சிங் சவுகான் - former Madhya Pradesh CM Shivraj Singh Chouhan
ஜெய்ப்பூர்: இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடவுளாக தெரிகிறார் என மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார்.
Modi is like god for non-Muslim refugees: Shivraj Singh Chouhan