உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஆயிரக்கணக்கானோருடன் சேர்ந்து யோகா செய்தார்.
'யோகா' கலாசாரத்தின் ஒரு பகுதி - மோடி - யோகா
ராஞ்சி: கலாசாரத்தின் ஒரு பகுதியாக யோகா விளங்குவதாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்தாம் ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
Modi
அப்போது பேசிய மோடி, "இந்தியா உலகிற்கு அளித்த மிகப்பெரிய கொடை யோகா. அமைதியான உலகத்தை உண்டாக்க யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. யோகாவிற்கும் இயற்கைக்கும் இடையேயான பந்தம் மிக முக்கியமானது. நம் கலாசாரத்தின் ஒரு பகுதியாக யோகா விளங்குகிறது.
உலகம் முழுவதும் உள்ள இருதயம் தொடர்பான நோய்களுக்கு யோகா மருந்தாக உள்ளது. உடல்நலத்திற்கு யோகா அவசியம். யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது" என்றார்.