தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி - ராஜபக்ச சந்திப்பு இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துமா? - Indo-Sri Lanka ties

டெல்லி: மோடி, ராஜபக்ச இடையேயான சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Rajapaksa
Rajapaksa

By

Published : Feb 8, 2020, 5:08 PM IST

ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தக் கூட்டத்தில் இருநாட்டு பாதுகாப்பு, வணிகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேசினார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதிவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நவம்பர் மாதம் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 9ஆம் தேதி வாரணாசிக்கு பயணம் மேற்கொண்டு காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் சார்நாத் புத்த வழிபாட்டு தலத்திலும் தரிசனம் செய்யவுள்ளார். ராஜபக்சவின் வருகையையொட்டி வாரணாசியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிகாரில் உள்ள புத்த கயாவிற்கு பிப்ரவரி 10ஆம் தேதி சென்று மகாபோதி கோயிலில் வழிபாடு மேற்கொள்ளவுள்ளார். பின்னர், அவர் திருப்பதிக்கு செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக மஹிந்த ராஜபக்ச 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: கேரளாவில் மாநில பேரிடர் தளர்வு

ABOUT THE AUTHOR

...view details