தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அண்டை நாடுகளுடன் கட்டியெழுப்பிய உறவு வலையை பிரதமர் அழித்துவிட்டார் - ராகுல் சாடல்

அண்டை நாடுகளுடன் பல ஆண்டுகளாக நாம் கட்டி எழுப்பியிருந்த உறவு வலைகளை பிரதமர் நரேந்திர மோடி மொத்தமாக அழித்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Modi has destroyed the web of relationships said Rahul gandhi
Modi has destroyed the web of relationships said Rahul gandhi

By

Published : Sep 23, 2020, 6:50 PM IST

டெல்லி: அண்டை நாடுகளுடன் நட்புறவில் இல்லாத சூழலில் இருப்பது நாட்டிற்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நண்பர்கள் இல்லாத ஒரு பகுதியில் வாழ்வது ஆபத்தானது. பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டுகளாக அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் கட்டியெழுப்பிய "உறவு வலையை" அழித்துவிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ’இந்தியாவுடனான வங்கதேச உறவுகள் பலவீனமடைவதால், சீனாவுடனான உறவுகள் வலுப்பெறுகின்றன' என்ற தலைப்பில் வெளியான ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் செய்தியையைும் தனது பதிவில் இணைத்திருந்தார்.

மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்த காங்கிரஸ், அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு பலவீனமடைந்துள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறது.

காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அரசாங்கம், இந்தியாவின் உறவுகள் பல நாடுகளுடன் ஆழமடைந்துள்ளது. மேலும், அதன் நிலைப்பாடு உலகளவில் வலுப்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஜனநாயக இந்தியாவில் தொடரும் அடக்குமுறை: எம்பிக்கள் சஸ்பெண்ட் பற்றி ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details