கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி, சுயசார்பு இந்தியா என்ற பெயரில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என்றார்.
அதன்படி, ஒவ்வொரு மாலையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தார். ஐந்தாவது நாளான நேற்று கடைசி பொருளாதாரத் தொகுப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனை உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
அதில், ''ஊரகப்பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குடிபெயர் தொழிலாளர்களுக்கும், ஊரகப் பகுதி மக்களுக்கும் நீடித்த வாழ்வாதாரத்தை உருவாக்குவதோடு, நாட்டின் உள்கட்டமைப்பை உயர்த்த உதவும். சுயசார்பு இந்தியா திட்டத்தில் இந்த அறிவிப்புகள், இந்தியாவை நீண்ட தூரம் பயணிக்க உதவும்.