தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள், தொழிலாளர்களை மோடி ஏமாற்றிவிட்டார் - ஹன்னா முல்லா - மோடியை விமர்சித்த ஹன்னா முல்லா

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஏமாற்றியவிட்டதாக அகில இந்திய விவசாய சங்க பொதுச்செயலாளர் ஹன்னா முல்லா விமர்சித்துள்ளார்.

hannah mollah
hannah mollah

By

Published : Feb 1, 2020, 10:31 AM IST

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும், அகில இந்திய விவசாயிகள் பேரவை பொதுச்செயலாளருமான ஹன்னா முல்லா நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு தேவையில்லாத திட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளை ஏமாற்றிவருகிறது. பிரதான் மந்திரி சாமான் நிதி, பிரதான் மந்திரி ஃபாசால் பீமா யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்காமல் தோல்வியடைந்துள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பங்கள் இன்றளவும் தொடர்ந்து நடந்துகொண்டுகின்றன.

விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ட ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிக்கப்பட வேண்டும். விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

100 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராம மக்களுக்கு வேலை அளிக்கப்படுவதில்லை. வருடத்தில் குறைந்தபட்சம் 100 நாளாவது மக்களுக்கு வேலை தேடித்தர அரசு பட்ஜெட் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்செய்யப்படவுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து அவரிடம் கேட்டபொழுது, "அரசு தொடர்ந்து ஏமாற்றிவருவதால் அது குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க : இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details