ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் உள்ள மசூதிகள், கோயில்கள், குருத்வாராக்கள், தேவாலயங்களுக்கு சென்று மக்களுக்கு சானிட்டைசர், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்குகொண்ட அவர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது, "நாட்டு மக்களுக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்று தான், பிரதமர் மோடி உங்களை கோவிட்-19 பாதிப்பிலிருந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை வைத்திருக்காதீர்கள்.
கைதட்டல் அல்லது விளக்கேற்றுவதால் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கமுடியாது.கரோனா வைரஸ் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு முற்றிலும் தோல்வியுற்றுள்ளது.
மத்திய அரசு நம்மை காப்பாற்றும் என நம்பாதீர்கள் - ஓவைசி ஊரடங்கு அரசியலமைப்பிற்கு விரோதமானது, திட்டமிடப்படாத செயல். ஏறத்தாழ வெறும் 500 பேர் மட்டுமே வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் மத்திய அரசால் திணிக்கப்பட்ட ஊரடங்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
கோடிக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பி வந்ததும் ஊரடங்கு நீக்கப்படுகிறது. ரயில்களில் உயிரிழந்த 85 தொழிலாளர்களுக்கு யார் பொறுப்பு கூறுவது ? அவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு பத்திரிகையாளர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர்களைப் பற்றி யார் பேசுவார்கள்? மத்திய அரசு யானையைப் பற்றி மட்டுமே பேசுகிறது. தலைப்புச் செய்திகளை நிர்வகிப்பதில் மட்டுமே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது" என கூறினார்.