ஜே.எம்.ஐ பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 95.23 விழுக்காட்டை பெற்றுள்ளதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஜே.எம்.ஐ கல்வி நிறுவனத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் வன்முறை சம்பவங்கள் ஈடுபட்ட வெளிநபர்களை தேடுவதற்காக காவல் துறையினர் வளாகத்திற்குள் நுழைந்ததால் பல்கலைக்கழகம் கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று போர்க்களமாக மாறியது.
பல்கலைக்கழகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது , வன்முறையில் ஈடுபட்ட வெளிநபர்களை தேடுவதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டில் முதல் நிலை அடைந்தது தொடர்பாக பேசிய ஜேஎம்ஐ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நஜ்மா அக்தர், இந்த சாதனைக்கு உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகத்தின் மீதான கவனம், வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகம் அதன் செயல்திறனை மேம்படுத்தும். சமீபத்திய காலங்களில் பல்கலைக்கழகம் கடந்து வந்த சவாலான நேரத்தின் காரணமாக இந்த சாதனை மிகவும் முக்கியமானது” என்று அக்தர் கூறினார்.