நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றபின், முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரதமர் மோடி நாளை மாலத்தீவு செல்கிறார். அங்கு இரு தரப்பு உறவு, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சாலிகுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மாலத்தீவுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக நாளை மாலத்தீவு செல்கிறார்.
modi
இதையடுத்து ஜூன் 9ஆம் தேதி இலங்கை புறப்பட்டுச் செல்கிறார். அங்கு இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும் மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் அடுத்த வாரம், நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் மோடி, அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.