கிழக்கு லடாக் பகுதியில் சீனா நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவிவருகிறது.
நாட்டில் பல இடங்களில் சீனாவுக்கு எதிராக போராட்டங்களும், சீனப் பொருள்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுப்பெற்று வருகிறது.
அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பினர் சீனாவின் 500 பொருள்களுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளனர். இதுமட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், சீனாவில் விஐபிக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகமான வெய்போவில் வைத்திருந்தை கணக்கை பிரதமர் நரேந்திர மோடி மூட முடிவு செய்துள்ளார்.
இதுவரை மோடி கணக்கில் 115 பதிவுகள் இருந்தன். அதில், 113 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இருப்பதை அகற்றுவது கடினம் என்பதால் அவை தொடர்ந்து உள்ளது.